snake bit the student in the toilet of the government school!

Advertisment

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஓலக்காசி அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்டமாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சனி ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை கழித்து இன்று திங்கட்கிழமை பள்ளி திறக்கப்பட்ட நிலையில் அதே பள்ளியில் படிக்கும் ஆலாம்பட்டரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவஞானம் என்பவரது மகள் பூவிகா (12) இன்று காலை பள்ளி வளாகத்துக்குள் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு பதுங்கி இருந்த பாம்பு பூவிகாவின் காலில் கடித்துள்ளது.

இதனால் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்த பூவிகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தநிலையில், அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்துக்குள் கழிப்பறைக்குச் சென்ற மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.