ADVERTISEMENT

இன்ஸ்டா காதல்; திருமணத்தை மீறிய உறவு - இளம்பெண் கொடூரக்கொலை

01:33 PM Aug 21, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோதினி(19). இவருக்குக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் வினோதினி, திருமணத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் தென்காசி கடையநல்லூரை சேர்ந்த மனோரஞ்சித என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கும் நாளடைவில் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. மேலும் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் விநோதிநியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு மாப்பிள்ளையுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனைத் தெரிந்து கொண்ட மனோரஞ்சிதம் காதலை மறக்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றியுள்ளனர். இந்த நிலையில் வினோதினியும் மனோரஞ்சிதமும் தொடர்ந்து காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கணவரை விட்டுவிட்டு மனோரஞ்சிதத்தைத் தேடி கடையநல்லூருக்கே வந்துள்ளார். மேலும் வினோதினி மனோரஞ்சிதத்துடன் அங்கேயே தங்கி வாழ்ந்தும் வந்துள்ளார்.

இதனிடையே வினோதினி இன்ஸ்டாகிராமில் வேறு சில ஆண்களுடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தெரிந்து கொண்ட மனோரஞ்சிதம் வினோதினியை கண்டித்துள்ளார். ஆனால் அதனை வினோதினி பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனோரஞ்சிதம் தனது நண்பர்களின் உதவியுடன் வினோதினியை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று கொலை செய்து அவரது உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கிணற்றில் வீசி சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கிணற்றிலிருந்து வினோதினியின் உடலை மீட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். பின்பு அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினருக்கு மனோரஞ்சிதம் மற்றும் அவரது 4 நண்பர்கள் தான் கொலை செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வர அவர்கலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT