சிவகங்கை அருகே ஜீவசமாதி அடையப்போவதாக பொதுமக்களை ஏமாற்றி உண்டியலில் பணம் வசூலித்த இருளப்பசாமி, அவரது மகன் கண்ணாயிரம் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/013_5.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சிவகங்கை பாசங்கரை அருகே தான் ஜீவசமாதி அடையப்போவதாக 80 வயது முதியர் இருளப்பன் வால்போஸ்டர் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவித்திருந்தார். இதனையைடுத்து கடந்த 13 ஆம் தேதி இரவு அன்று பொதுமக்கள் கூட்டம் கலைகட்டியது. இரவு 12 மணிமுதல் காலை 5 மணிவரை காத்திருந்த பக்தர்கள் அவர் ஜீவசமாதி அடையப்போகும் நிகழ்வை காண ஆர்வத்துடன்காத்திருத்தனர். அதேபோல் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட உயர் அதிகாரிகளும் இதனைக்காண வந்திருத்தனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் கூட்டதால் பந்தல் நிரம்பி வழிந்திருந்தது. அவர் ஜீவசமாதி அடைய 10 க்கு 10 அளவில் குழியும் தோண்டப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஜீவசமாதி அடையாமல் மக்களை இறுதிவரை ஏமாற்றினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/012_2.jpg)
இந்த நிகழ்வில் இருளப்பன் அருளாசி வழங்குகையில் வந்திருந்த பகதர்கள், பொதுமக்கள் 500, 2000 என காணிக்கைகளை கொட்டினர். ஆனால் இறுதிவரை அவர் ஜீவசமாதி அடையவில்லை. பொதுமக்களைஒரு இடத்தில் திரட்டி அவர்களுக்கு இடையூறு செய்ததாக சாமியார் இருளப்பன், அவரது மகன் கண்ணாயிரம் உட்பட 7 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)