ADVERTISEMENT

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் போடும் பணி துவக்கம் - சென்னையில் முதல்வர் துவக்கி வைப்பு!

07:44 AM Jan 10, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கரோனா, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை 100க்கும் நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம், தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்த ஒமிக்ரான் கரோனாவால் இதுவரை பெரிய அளவிலான உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதற்கிடையே ஒமிக்ரான் பரவலையொட்டி, சில நாடுகள் மக்களுக்குப் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆலோசனையை தொடங்கியுள்ளன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி வரும் 10ம் தேதி முதல் முன்களப் பணியாளர்கள், 60 வயதை தாண்டிய இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி இந்தியா முழுவதும் இந்த பூஸ்டர் டோஸ் போடும் பணி இன்று காலை துவங்குகிறது. இந்தியாவில் 35 கோடி பேர் இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள். தமிழகத்தில் இந்த பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பட்டினப்பாக்கத்தில் துவங்கி வைக்கிறார். தமிழகத்தில் ஏறக்குறைய 34 லட்சம் பேர் பூஸ்டர் டோல் செலுத்தக் தகுதி உடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இரண்டாவது டோஸ் தடுப்பூசி கடந்த ஏப்ரல் மாதத்திற்குள் போட்டிருந்தால் தற்போது பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்லாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT