Published on 13/01/2022 | Edited on 13/01/2022

கரோனா பூஸ்டர் தடுப்பூசிப் போடுவதற்காக செல்போன் அழைப்பு மூலமாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் தொடர்பு கொண்டு பண மோசடி செய்வதாக சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
பூஸ்டர் டோஸ் போடுவதற்கு விருப்பம் தெரிவிப்பவர்களின் செல்போன் எண்ணை தொடர்புக் கொள்ளும் கும்பல், அவர்களுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி, அதில் விவரங்களைப் பதிவிடுமாறு தெரிவிப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். பின்னர், செல்போனுக்கு வரும் ஓடிபியைப் பெற்றுக் கொண்டு வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்வதாக எச்சரித்துள்ளனர்.
இதுபோன்று செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பாதீர்கள் என்றும் தேவையற்ற லிங்குகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள் என்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.