ADVERTISEMENT

"பெட்ரோல் குண்டுவீச்சு- பாதிப்புகளை ஆய்வு செய்ய பா.ஜ.க. குழு"- அண்ணாமலை பேட்டி!

02:28 PM Sep 25, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT


கோவை விமான நிலையத்தில் இன்று (25/09/2022) செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பான பாதிப்புகளை ஆய்வு செய்ய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோர் தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் தரும் சேத விவர அறிக்கை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பப்படும்.

ADVERTISEMENT

பெட்ரோல் குண்டுவீச்சு விவகாரத்தில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறோம். வன்முறையாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை என்ற டி.ஜி.பி.யின் எச்சரிக்கையை வரவேற்கிறேன். தமிழக அரசின் நடவடிக்கை கடந்த இரண்டு, மூன்று நாட்களாக திருப்திகரமானதாக இல்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் செயல்படக் கூடாது.

பெட்ரோல் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் செல்கிறேன். கோவையில் நாளை (26/09/2022) நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் நானும் கலந்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT