ADVERTISEMENT

ஹோட்டல் பிரியாணியில் கருத்தடை மாத்திரை? - கோவையில் பரபரப்பு 

10:53 AM May 23, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக வதந்தி பரப்பிய கும்பல் மீது கோவை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளில் பூச்சிகள் இருப்பதாகவும், அசைவ உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகளை உபயோகப்படுத்துவதாகவும் அதிகமான புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு உணவகங்களில் ஆய்வு செய்து, தவறு செய்யும் உணவக உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவையில் நடந்த அடுத்தடுத்து கொலை சம்பவங்களால் காவல்துறையினர் தற்போது பலரையும் கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட மோதல் காரணமாகவும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதன் பின் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல்துறையினர் சமூக வலைத்தளங்களை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தாமரைக் கண்ணன் என்பவர் அளித்த புகாரில், கோவையில் பிரியாணி கடையில் கருத்தடை மாத்திரைகளைக் கலந்து விற்பதாக வதந்தி பரப்பப்படுவதாகவும் இந்த பதிவினால் இரு தரப்பினரிடையே மோதல் உண்டாகக்கூடிய சாத்தியம் உள்ளதால் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கூறியிருந்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை 9 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் உத்தரவாதம் அளித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT