Police are investigating Mira Jackson who was brought to Coimbatore!

கோவையில் சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டார்.

Advertisment

முன்னதாக மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த அவரை பெங்களூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். கோரிக்கையின்படி பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டதால் மாணவியின் உடலை வாங்க பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதேபோல் மாணவியின் வீட்டின் முன்பு மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டங்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளது.

Advertisment

தற்பொழுது கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட மீரா ஜாக்சனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணைக்குப் பிறகு இன்று மதியத்திற்குள் லட்சுமி மில் பகுதியில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் அவரை நேரில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைக்க திட்டமிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.