ADVERTISEMENT

போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய மஸ்தூர் சங்கத்தினர்கள்! (படங்கள்)

05:22 PM Oct 28, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

அரசின் முதலீட்டு விலக்கு, தனியார்மயமாக்கல், தேசிய பணமாக்கல், பெருநிறுவன மயமாக்கல் கொள்கைக்கு எதிராக பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில் சென்னையில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் எத்திராஜ் காலேஜ் சாலையில் அமைந்துள்ள போஸ்டல் அக்கவுண்ட் அலுவலக வாயிலில் (சங்கீதா ஓட்டல் எதிர் புறம்) உணவு இடைவேளையின் போது போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாரதீய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத தலைவர் ஹிரன்மை பாண்ட்யா பங்கேற்றார். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பொதுத்துறை நிறுவனங்களைக் காப்போம், தேசிய நிறுவனங்களைக் காப்போம் என கோஷங்களை எழுப்பினர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT