ADVERTISEMENT

“எனக்கு வாழ்வாதாரம் போச்சு..திருவோடு வாங்கி கொடுங்க பிச்சை எடுக்குறேன்” ஆசிரமத்தை இடித்ததாக புகாரளித்த பாஸ்கரானந்தா

02:54 PM Oct 07, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கர்ணம்பேட்டை பகுதியில் செல்வக்குமார் என்பவரது இடத்தில் பாஸ்கரானந்தா என்பவர் ஆசிரமம் ஒன்றை கட்டி வருகிறார். வெளியூரில் இருந்த பாஸ்கரானந்தாவிற்கு ஆசிரம கட்டிடம் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் தனது ஆசிரமம் தரைமட்டமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து பல்லடம் காவல்நிலையத்திற்கு தனது பக்தர்களுடன் சென்று புகாரளித்தார். மேலும் நித்தியானந்தா என நினைத்து என் ஆசிரமத்தை இடித்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்த பாஸ்கரானந்தா வாகனங்களில் ஏராளமான பக்தர்களை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட காவல் துறை உயர் அதிகாரி எச்சரித்துள்ளார். அவரிடம் பேசிய பாஸ்கரானந்தா, “ஐயா நான் நாலு நாளா சாப்பிடலங்கையா. நான் போய் பிச்சை எடுக்கிறதா. திருவோடு வாங்கி கொடுங்க பிச்சை எடுக்குறேன். நான் இததான் கேட்க முடியும்.

எனக்கு வாழ்வாதாரம் போச்சு. என் மனநிலைல இருந்து கொஞ்சம் யோசிச்சு பாருங்க. என் உயிர் போறதுக்குள்ள நீங்க காப்பாத்துறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. நான் காவல்துறைய நம்பி வந்துருக்கேன். தயவு செஞ்சி ஆன்மீகத்துல இருக்குறவன ரோட்ல நின்னு அழுக வைக்காதீங்க” எனக் அழுதுகொண்டே கூறும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT