ADVERTISEMENT

அலுவலகம் முன்பு வைக்கப்பட்ட பேனர்; மாவட்ட கவுன்சிலர் முடிவால் ஏற்பட்ட பரபரப்பு!! 

06:40 PM Jun 04, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முகப்பில் கடந்த ஆண்டு கரோனா பரவல் சமயத்தின் போது பெரிய அளவில் விழிப்புணர்வு பேனர் ஒன்று அங்கு வைக்கப்பட்டது. அதில் முகக்கவசம் அணிவது சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, கைகளை சுத்தம் செய்வது ஆகிய விழிப்புணர்வு படங்கள், வாசகங்கள் இடம் பெற்று இருந்துள்ளது. இந்த பேனர் மேல் பகுதியில் பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன.

ADVERTISEMENT

கரோனா விழிப்புணர்வு வாசகம் இடம்பெற்ற பேனர் என்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு அதே இடத்தில் அந்த பேனர் தொடர்ந்து வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை திமுக மாவட்ட கவுன்சிலர் சக்தி விநாயகம் என்பவர் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வளர்ச்சிப் பணிகள் குறித்து விவரம் கேட்பதற்கு வந்துள்ளார். அப்போது அவர் முன்னாள் முதல்வர்கள் படங்கள் எப்படி அதில் இடம் பெறலாம் என அந்த விழிப்புணர்வு பேனர் அவரது கண்களை உறுத்தியது.

நடப்பது எங்கள் ஆட்சி இப்போது முன்னாள் முதல்வர்கள் படம் எப்படி அதில் இடம்பெறலாம் அலுவலகத்திற்கு உள்ளே சென்ற சக்தி விநாயகம் அங்கிருந்த அலுவலர்கள் மூலம் அந்த பேனரை அகற்றுமாறு உத்தரவிட்டார். ஊழியர்களும் அந்த பேனரை அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகு ஒன்றிய ஆணையர் விஜயா அவர்கள் அலுவலகம் வந்துள்ளார். பேனர் அகற்றப்பட்டதை அலுவலர்களிடம் கூறினார். விழிப்புணர்வு வாசகம் இடம்பெற்ற பேனர் இருப்பது நல்லது தானே வேண்டுமானால் அதில் இடம் பெற்றுள்ள முன்னாள் முதல்வர்கள் படங்களை மறைத்து விட்டு அதே இடத்தில் அந்த விழிப்புணர்வு பேனர் வைக்கலாமே என்று ஊழியர்களிடம் ஆலோசனை கூறியுள்ளார்.

அதன்படி அந்த இடத்தில் முன்னாள் முதல்வர்கள் படங்களை மறைத்து கரோனா விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்ற அந்த பேனர் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒன்றிய அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்கு வந்த மக்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT