ADVERTISEMENT

வெளிநாடு வாழ் தமிழக தொழிலாளர்களுக்காக  இன்று பதாகை ஏந்திய தலைவர்கள்..

08:34 PM Jun 05, 2020 | kalaimohan



மனிதநேய ஜனநாயக கட்சி ஒருங்கிணைப்பில் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் தாயகம் அழைத்து வர வேண்டும் என்றும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட வாரியத்தை ஒரு IAS அதிகாரியை கொண்டு உயிரூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி தலைவர்கள் தங்கள் வீடுகளில் பதாகை ஏந்தி சமூக இணையங்களில் பதிவிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அதன்படி இன்று (05-06-2020) மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், மஜக தலைமை நிர்வாகிகளும் பதாகை ஏந்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதற்கு ஆதரவாக அரசியல் மற்றும் சமூக ஆளுமைகளும் பங்கேற்றனர்.
தோழர். நல்லக்கண்ணு,
ஐயா.பழ. நெடுமாறன், சீமான்,
பேரா..,,கொளத்தூர் மணி,அபுபக்கர் MLA,
தனியரசு MLA, கருணாஸ் MLA,விஜயதரணி MLA,
நெல்லை முபாரக்,
,பெ.மணியரசன்,,

திருமுருகன் காந்தி,தோழர். கு.ராமகிருஷ்ணன்,
P.R. பாண்டியன், சுப.உதயகுமார்,
பேரா. மார்க்ஸ்,
தோழர்.குடந்தை அரசன்,அருட்தந்தை .ஜெகத் கஸ்பர்,
இயக்குனர் கெளதமன்,
இயக்குனர் களஞ்சியம்
வழக்கறிஞர் மகாராஜன், என பல தரப்பினரும் பங்கேற்றனர்.


அதுபோல் ஹைதர் அலி, கோனிகா.பஷீர் ஹாஜியார், மவ்லவி அப்துல் காதர் மதனீ, S.M.பாக்கர், தாவூத் மியாகான், K.M.ஷெரீப், மவ்லவி மன்சூர் காஸி ஃபி, பக்கீர் முகம்மது அல்தாபி, மவ்லவி தர்வேஸ் ரஷாதி, மவ்லவி .ஹாமீத் பக்ரி, அத்திக்குர் ரஹ்மான், T.S.வக்கீல் அஹமத் போன்ற சமூக ஆளுமைகளும் மஜகவின் போராட்டத்தில் கைகோர்த்தனர்.


தோழர். இமயம், சரவணன், தோழர். மதன், தோழர். வையவன் போன்ற சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றனர்.

இவர்களுடன் மஜக ஏராளமான சமூக செயற்பாட்டாளர்களும் பதாகை ஏந்தி சமூக இணையதளங்களில் பதிவிட்டுள்ளனர். இன்று காலை முதல் இது சார்ந்த செய்திகள் வலைதளங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. உலகமெங்கும் பல நாடுகளில் வாழும் தமிழக தொழிலாளர்கள் ஆங்காங்கே பதாகை ஏந்தி, இந்திய அரசு தங்களை இலவசமாக தாயகம் அழைத்து செல்ல வேண்டும் என்று பதாகை ஏந்தி சமூக இணையங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT