Tamil Nadu Cabinet Resolution- thamimun Ansari

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையில் இணைக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து காவிரி உரிமை மீட்பு குழு சார்பி ல் பதாகை ஏந்தி அவரவர் வீட்டு வாசலில் 10 நிமிடம் நிற்கும் போராட்டத்தை அதன் தலைவர் பெ.மணியரசன் அறிவித்திருந்தார்.

Advertisment

இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி உட்பட பல அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்புகளும் ஆதரவு கொடுத்திருந்தனர்.இன்று தோப்புத்துறையில் தனது வீட்டு வாசலில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பதாகை ஏந்தி முழக்கமிட்டார்.

Advertisment

அதே தெருவில் சமூக இடைவெளியுடன் அவரவர் வீட்டு வாசலில் நின்றவாறு திரளானோர் காவிரி உரிமையை வலியுறுத்தி பதாகை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு காலத்தில் திட்டமிட்டு மத்திய அரசு காவிரி உரிமையை பறித்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

Tamil Nadu Cabinet Resolution- thamimun Ansari

காவிரி மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது என்பதால், தமிழக அமைச்சரவை கூடி மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.காவிரி எங்களுக்கு வாழ்வாதாரம் என்றும், தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் காவிரியால் பலனடைகிறது என்றும் இது தமிழகத்தின் பொது பிரச்சனை என்றும் கூறினார்.

Advertisment

மஜகவினர் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அவரவர் வீதிகளில், வீடுகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அறிவிக்கப்படாத பிற மாவட்டங்களிலும் கூட மஜகவினர் இப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

Tamil Nadu Cabinet Resolution- thamimun Ansari

சீமான், வேல்முருகன்,திருமுருகன் காந்தி, தனியரசு,கருணாஸ், ஜான் பாண்டியன், இயக்குனர் கெளதமன், இயக்குனர் களஞ்சியம், சுப.உதயகுமார், பேரா. ஜெயராமன், காவிரி தனபாலன் உள்ளிட்ட தலைவர்களும் இதற்கு ஆதரவு கொடுத்ததால், களம் விறு விறுப்படைந்தது. பலதரப்பட்ட மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு, முகநூல் மற்றும் வலைதளங்களில் அதை பதிவிட்டு மத்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.