ADVERTISEMENT

தடை செய்யப்பட்ட பயோடீசல் மீண்டும் புழக்கத்தில்..?

01:32 PM Apr 16, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய முழுவதும் பயோடீசல் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்து, அதைப் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதித்துள்ளது. தற்போது தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பயோ டீசல் விற்பனை துவங்கியுள்ளது. பயோ டீசல் என்பது குருடாயில் என்று சொல்லப்படும் கழிவில் மண்ணெணய் கலந்து பயன்படுத்துவது. கச்சா எண்ணெயின் இறுதி கழிவான அதில் இருந்து தயாரிக்கப்படும் இந்த ஆயில், லாரி உள்ளிட்ட கனரக டீசல் இன்ஜின் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

ஆனால், இந்த ஆயில் பயன்படுத்தும் வாகனங்களில் உள்ள பம்புகள் பழுதடைவதால், இதனை தமிழக அரசு தடை செய்தது. தற்போது கரூர் பகுதிகளில் உள்ள குவாரிகளில் இந்தப் பயோடீசல் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் சரக்கு லாரிகள் வைத்திருக்கும் முதலாளிகளும் சிறிய அளவில் லாரிகள் வைத்திருக்கும் முதலாளிகளும் இந்தப் பயோ டீசலை பயன்படுத்துகின்றனர். இதனால் அரசு நடத்தக்கூடிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்டவை மூலம் விற்பனை செய்யப்படும் சுத்தமான டீசல் விற்பனையாகாமல், அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை தருகிறது.

இந்தப் பயோ டீசல் முழுமையாக மத்திய அரசால் தடை செய்யப்பட்டிருந்தும் ஆந்திரா, கோவா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து லாரிகள் மூலம் நள்ளிரவில் தமிழகத்திற்குள் கொண்டுவரப்பட்டு, சில குறிப்பிட்ட டீலர்கள் அதனை 50க்கும் அதிகமான பேரல்களில் நிரப்பி வைத்து, அவர்களுடைய குவாரிகளுக்குப் பயன்படுத்துவதோடு விற்பனையும் செய்கின்றனர். தற்போது ஒரு லிட்டர் டீசலின் விலை 86 ரூபாய் என அரசு நிர்ணயித்திருக்கும் நிலையில், இந்தப் பயோ டீசலின் விலை 74 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 12 ரூபாய் விலை குறைவாக விற்கப்படும் இந்தப் பயோடீசலை மட்டுமே லாரி உரிமையாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி, 35 லிட்டர் - 50 லிட்டர் கேன்கள் மூலம் அவற்றை சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர். டீசல் என்ஜின் பயன்படுத்தக்கூடிய நான்கு சக்கர இலகுரக வாகனங்கள், கார் உள்ளிட்டவை இந்தப் பயோ டீசலைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பயோ டீசல் பயன்பாட்டைத் தடுக்கவும், அவற்றின் கொள்முதலை தடை செய்யவும் தமிழகம் முழுவதும் உணவு கலப்பட தடுப்பு பிரிவு டிஎஸ்பிக்கள் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 3 டிஎஸ்பிக்கள், ஆந்திரா மற்றும் கோவாவில் இருந்து கொண்டு வரப்படும் பயோ டீசலை தமிழகத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் மற்றும் பயோ டீசல் வாங்கி மொத்தமாக விநியோகிக்கும் ஏஜென்டுகள் ஆகியோரிடமிருந்து மாதம் தவறாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனைப் பயன்படுத்துவதற்கும் விற்பதற்கும் அனுமதி அளித்துள்ளனர். அதிலும், 200 முதல் 500 வரையிலான சரக்கு லாரிகள் வைத்திருக்கக்கூடிய முதலாளிகளோடு நேரடி தொடர்பில் இருக்கக்கூடிய டிஎஸ்பிக்கள், சட்டரீதியாக எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அதை சமாளிப்பதற்கு தயாராகவும் உள்ளனர். எனவே மத்திய அரசும், தமிழக அரசும் இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணுமா?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT