ADVERTISEMENT

காரைக்காலில் பெண் தாதா நுழைய இரண்டு மாதங்களுக்கு தடை

10:48 AM Apr 02, 2019 | kalaimohan

காரைக்காலின் பெண் தாதா என்றழைக்கப்படுகிற எழிலரசி நடக்க இருக்கும் நாடாளுமன்றத்தேர்தல் முடியும்வரை காரைக்கால் பகுதியில் நுழையக்கூடாது என துணை கலெக்டர் தடை உத்தரவு பிறப்பித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வளையை கிளப்பி உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

காரைக்கால் திருப்பட்டினத்தை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி ராமு, அவரது முதல் மனைவி வினோதா, அவரது இரண்டாவது மனைவி எழிலரசி. இவர்கள் இருவருக்கும் இடையே நடந்தசொத்து பிரச்சனைவிவகாரமாக கடந்த 2013 ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு இரண்டாவது மனைவி எழிலரசியோடு சென்று திருமிக்கொண்டிருந்த ராமுவை கூலிப்படையினரால் காரைக்காலில் நட்டநடுரோட்டில் ராமுவை கொடுரமாக எழிலரசி கண்முன்னே கொலைசெய்தனர். அதோடு எழிலரசியையும் முகங்களில் வெட்டிசிதைத்தனர், அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார் எழிலரசி.

அதற்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் ராமன் கொலைக்கு காரணமான திருப்பட்டினம் ஐயப்பன், முன்னாள் அமைச்சர் சிவகுமார் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்குகள் தொடர்பாக எழிலரசி சிறையில் இருந்து, சிலமாதங்களுக்கு அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்தநிலையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக காரைக்காலில் உள்ள முக்கிய பிரமுகர் அவரின் உதவியை நாடியிருக்கின்றனர். இந்த தகவல் மற்ற அரசியல் கட்சியினர் மூலம் காக்கிகளுக்கு தெரியவர, எழிலரசி காரைக்கால் வந்தால் தேர்தல் சமயத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழும் அதனால் எழிலரசி தேர்தல் முடியும்வரை காரைக்காலில் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று காரைக்கால் சீனியர் எஸ்.பி துணை கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் இரண்டு மாதத்திற்கு எழிலரசி காரைக்கால் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதித்துள்ளார்.

இதுகுறித்து காக்கிகள் வட்டாரத்தில் விசாரித்தோம், ‘’ இந்த விவகாரத்தை சாதாரணமா கண்டுக்காம விட்டிருந்தாலே எழிலரசியால் எந்தவித பாதிப்பும் இருந்திருக்காது, இன்று உள்ள இணையதள தொடர்பால் எதையும் செய்யமுடியும், போன் மூலமே எல்லாவற்றையும் அவர் செய்ய போகிறார் என்பது தான் உண்மை,’’ என்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT