ADVERTISEMENT

கற்பூர வியாபாரி கொலை… கொலைக்கான அதிர்ச்சி காரணத்தை சொன்ன சென்னை மாணவி! 

06:25 PM Dec 25, 2019 | kalaimohan

திருவொற்றியூர் சாத்துமாநகர் மேட்டுதெருவை சேர்ந்தவர் அம்மன் சேகர் (59). கற்பூர வியாபாரி. இவருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வியாபாரத்திற்காக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற அம்மன் சேகர் இரவு 10 மணியளவில் புதுவண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு திட்ட சாலை அருகில் வந்தார்.

அப்போது மர்மநபர் ஒருவர் அம்மன் சேகர் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடினார். இதையடுத்து, அம்மன் சேகர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை நடக்கும் முன்பு, அம்மன் சேகருடன் இளம்பெண் ஒருவர் பேசிக்கொண்டிருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் மேலும் விசாரணை நடத்தியதில், திருவொற்றியூர் பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் பவித்ரா (வயது 24) என்ற பெண் சிக்கினார். பின்னர், அம்மன் சேகரின் செல்போனை சோதனை செய்ததில் அம்மன் சேகரும், பவித்ராவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பவித்ரா கூறியதாவது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நானும், அம்மன் சேகரின் மகளும் பள்ளி தோழிகள். பி.காம். பட்டதாரியான நான் கடந்த 5 வருடமாக தோழியின் வீட்டிற்கு சென்று வந்த போது, தோழியின் தந்தையான அம்மன் சேகருக்கும் எனக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நான் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுத்தார். அம்மன் சேகர் பல இடங்களுக்கு என்னை அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்தார். நாங்கள் நெருக்கமாக இருந்ததை தனது செல்போனில் புகைப்படமாக எடுத்துக்கொண்டார். இதையடுத்து, அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு எங்கள் வீட்டிற்கு தெரியவந்ததையடுத்து.

எனக்கு திருமணம் செய்து வைக்க எனது பெற்றோர் முடிவு செய்தனர். இதையறிந்த அம்மன் சேகர், ‘என்னை தவிர நீ யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்றும், அப்படி திருமணம் செய்தால் நாம் உல்லாசமாக இருந்த படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவேன்’ என்றும் மிரட்டினார். இதனால் பயந்து போன நான் என்ன செய்வதென்று தெரியாமல் அம்மன் சேகரை, தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை அம்மன் சேகருக்கு போன் செய்து, உங்களுக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்க வேண்டும் நாம் வெளியில் செல்லலாம் என அழைத்தேன். அதன் பின்னர், நாங்கள் இருவரும் மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்தோம். இரவு நெருங்கியதும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது, புதுவண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு திட்ட சாலை அருகே வந்தோம். அப்போது இது தான் அம்மன் சேகரை தீர்த்து கட்ட சரியான இடம் என முடிவு செய்து, அவரிடம் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறினேன். அவர் நிறுத்தியதும், அம்மன் சேகரை மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்க கூறினேன். பின்னர், இன்று (அதாவது நேற்று) அம்மன் சேகரின் பிறந்த நாள் என்பதால், உங்கள் கண்ணை மூடுங்கள் நான் உங்களுக்கு பிறந்த நாள் பரிசு தருகிறேன் என கூறி கத்தியை எடுத்து அவரின் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டேன் என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT