ADVERTISEMENT

ஆயுஷ் மருத்துவமனைகள் பதிவு அவசியம்! கலெக்டர் வலியுறுத்தல்!

11:09 PM Nov 28, 2018 | sakthivel.m

தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) விதிகள் 2018-ன்படி ஆயுஷ் மருத்துவமனைகள் உட்பட அனைத்து மருத்துவ நிறுவனங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வலியுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கலெக்டர் பல்லவி பல்தேவ் தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது....

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) விதிகள் 2018-ன்படி மருத்துவ நிறுவனங்களை கட்டாய பதிவு செய்திட வழிமுறை வழங்கப்பட்டுள்ளது. அரசாணை எண்: 206, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, நாள்: 01.06.2018-ன் படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆயுஷ் மருத்துவமனைகள், ஆலோசனை மையங்கள், பஞ்சகர்மா, மூலிகை மசாஜ் மையங்கள் ஆகியவை தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம், 1997-ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். எனவே, தேனி மாவட்டத்தில் மருத்துவ சேவை அளித்துவரும் அனைத்து ஆயுஷ் மருத்துவமனைகள், ஆலோசனை மையங்கள் பஞ்சகர்மா, மூலிகை மசாஜ் மையங்களின் உரிமையாளார்கள் தங்களது மருத்துவ நிறுவனங்களை பதிவு செய்யும் பொருட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட சித்த மருத்துவ அலுவலரை உடனடியாக தொடர்புகொண்டு விவரங்களை பெற்று பதிவு செய்திட வேண்டும் என தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் போலி மருத்துவர்களும், போலி மருத்துவமனைகளும் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், படித்த மருத்துவர்களைக் கொண்டு மருத்துவமனைகள் இயங்குகிறதா என இந்த கட்டாயப் பதிவின் மூலம் எளிமையாக அறிந்துகொள்ளவும் முடியும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT