ADVERTISEMENT

ஆயுத பூஜை: அரசுப் பேருந்துகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஏற்பாடு!

10:45 AM Oct 07, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் இன்று (07/10/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்காக வருகின்ற ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து 12/10/2021 மற்றும் 13/10/2021 ஆகிய நாட்களில் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சிக்கு இயக்கப்படும். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயிலுக்குப் பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்துக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதிக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, சேலம், புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், கோயம்பத்தூர், பெங்களூரு ஆகிய மாவட்டங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் மேற்கூறிய பேருந்து சேவையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும். பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு அமைச்சர் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT