ADVERTISEMENT

டி.டி.வி. தினகரன் பேனர் வைக்க அனுமதி மறுப்பு: ஆட்டோக்களை அடித்து நொறுக்கி ஓட்டுனருக்கு மண்டை உடைப்பு

11:55 AM Apr 27, 2018 | rajavel


சிதம்பரம் நகரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த பொதுகூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு வெள்ளிக்கிழமை மாலை பேசுகிறார். அவரை வரவேற்கும் விதமாக கட்சியினர் நகர் முழுவதும் பேனர்களை வைத்துள்ளனர். இதில் இளைஞர் அணியை சார்ந்த சரவணன் மற்றும் வினோத்குமார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம் பஸ்நிலையம் வெளியே உள்ள ஆட்டோ நிறுத்தும் இடத்தில் பேனர்களை வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ADVERTISEMENT

அதற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் இங்கு பேனர் வைக்க யாருக்கும் அனுமதி கிடையாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நள்ளிரவில் அடியாட்களுடன் ஆட்டோ ஸ்டேன்டுக்கு வந்தனர். பின்னர் அங்கு நிறுத்தி வைத்திருந்த வேலு, சுரேஷ், சண்முகம், செந்தில், தியாகராஜன் ஆகிய ஜந்துக்கும் மேற்பட்டவர்களின் ஆட்டோக்களை ஆயுதங்களை கொண்டு அடித்து நொறுக்கினர். பின்னர் அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுனர் வீராசாமியை கட்டையால் தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்து அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

ADVERTISEMENT

நள்ளிரவில் சம்பவம் நடைபெற்றுள்ளது காலை 9 மணிவரைக்கும் சம்பந்தபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் டிடிவி தினகரன் கட்சியின் நிர்வாகிகளுடன் இணைந்து கட்டபஞ்சாயத்து பேசியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிற வரைக்கும் சிதம்பரம் வட்டத்தில் எந்த ஆட்டோக்களும் ஓடாது அறிவித்து வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் நிஷா மற்றும் காவல் துறையினர் சம்பந்தபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்கிறோம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆட்டோக்கள் ஓடாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பரபரப்பாக உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT