ADVERTISEMENT

திமுக தொண்டர் மீது தாக்குதல் - ஜாமீன் கோரி ஜெயக்குமார் மீண்டும் மனுத்தாக்கல்

06:34 PM Feb 23, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டுப் போட முயன்றதாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஜாமீன் கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். இதையடுத்து, ஜெயக்குமார் தரப்பு, அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தற்போது மனுத் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே இன்று தேர்தல் நானன்று சாலை மறியல் செய்ததாக ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT