ADVERTISEMENT

ஏடிஎம் கார்டு, பாஸ்புக் எதுவும் தேவையில்லை பணம் வேண்டுமா? கைரேகை போதும்!

05:36 PM Sep 05, 2019 | kalaimohan

சென்ற ஆண்டு தபால்துறையில் வங்கிசேவை தொடங்கப்பட்ட நிலையில் இன்று ஈரோடு தலைமை தபால் நிலையத்தில், ஆதார் எண்ணை பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

வங்கிசேவை ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், ஆதார் எண்ணை பயன்படுத்தி, தபால் அலுவலகத்தில் பணம் பெறும் வசதியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த முதல் நிகழ்வு ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் நடந்தது. இதை முதுநிலை அஞ்சல் அதிகாரி சாய்ராம் தொடங்கி வைத்தார். பிறகு நிருபர்களிடம் பேசிய அவர்,

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய அளவில், 1.36 லட்சம் அஞ்சலகங்கள் வங்கி சேவை மையமாக செயல்படுகிறது. இதற்காக, 2.5 லட்சம் அஞ்சலக ஊழியர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆதார் எண்ணை பயன்படுத்தி, அஞ்சலகங்களில் பணம் பெறும் வசதியும் துவங்கப்பட்டுள்ளது.

ஆதார் சார்ந்த பண பரிவர்த்தனை சேவை என்பது, ஏதாவது ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், அவசர தேவைக்காக, ஆதார் எண்ணை பயன்படுத்தி அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் ஒரு நாள், அதிகப்பட்சமாக, 10,000 ரூபாய் பணம் பெறலாம். இன்று ஈரோடு தலைமை அஞ்சலகத்தில், இச்சேவை துவங்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் பயன்பெறலாம். பணம் பெற, ஏ.டி.எம்., கார்டு, பாஸ் புத்தகம் தேவை இல்லை. அஞ்சலக கணக்கு வைத்திருக்க வேண்டியதில்லை. கைரேகையை வைத்து பணம் பெறலாம்.

மேலும், மினி ஸ்டேட்மென்ட் எடுக்கலாம். கிராமப்புறத்தில் இருப்பவர்கள், வங்கிக்கு செல்ல குறைந்தது, ஐந்து கி.மீ. முதல், பத்து கி.மீ., வரை கடக்க வேண்டும். இதனால், பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கும். இதற்கு பதில், அருகாமையில் உள்ள அஞ்சல் நிலையத்தில் அல்லது வழியில் தென்படும் தபால்காரரிடம் கூட கை ரேகை வைத்து பணம் பெறலாம்." இவ்வாறு சாய்ராம் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT