ADVERTISEMENT

ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!

05:45 PM Oct 08, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத் தேவைக்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நொய்யல் கால்வாய்ப் பாசன விவசாயிகள், கால்நடை தேவைகளுக்காகவும் நிலத்தடி நீர் உயரவும், நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறந்துவிட கோரிக்கை விடுத்துள்ளனர். வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் தற்பொழுது உள்ள நீர் இருப்பைக் கணக்கில் கொண்டு, கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நொய்யல் கால்வாயிலுள்ள 19403.70 ஏக்கர் பாசன பகுதிகளுக்கும், கால்நடை தேவைகளுக்காகவும், நிலத்தடி நீர் உயரவும் சிறப்பு நனைப்பிற்காக, நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து 09/10/2020 முதல் 28/10/2020 வரை உள்ள காலத்தில் முறைவைத்து 20 நாட்களுக்கு மிகாமல் 224.64 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன். விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT