ADVERTISEMENT

ஓபிஎஸ் நேரில் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!!

03:36 PM Feb 25, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆறுமுகசாமி ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று ஆணையத்தின் விசாரணை காலத்தை மேலும் 4 மாதம் நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் துணைமுதல்வர் ஓபிஎஸ்ஸிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.மறைவை தொடர்ந்து அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக சர்ச்சைகள் எழ, அது குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் இதுவரை 150 க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினமே விசாரணை ஆணையம் முடிவு பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துணைமுதல்வர் உட்பட இன்னும் பல முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால். மேலும் இறுதிக்கட்ட பணிகள் முடிக்க இன்னும் நாட்கள் தேவைப்படும் என ஆணையம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெ.மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்திற்கு நான்கு மாதங்கள் காலநீட்டிப்பு அவகாசத்தை தமிழக அரசு வழங்கியுள்ள நிலையில் துணைமுதல்வர் ஓபிஎஸிடம் விசாரணை நடத்த 28 ஆம் தேதி ஆஜராகும் படி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல் அப்போலோ மருத்துவர்கள் சஜன் கே, அருட்செல்வன், மீனாட்சிசுந்தரம், ரவிசந்திரன், ராம.கோபாலகிருஷ்ணன், சிவஞானசுந்தரம், ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும் 27 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரை 5 வது முறை ஒபிஎஸ்க்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT