ADVERTISEMENT

கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை; முதல்வர் திறந்து வைத்தார்!

07:12 PM Jun 15, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை ஜூன் 15 ஆம் தேதியான இன்று திறந்து வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. 240 கோடி ரூபாய் மதிப்பில் இந்த மருத்துவமனையானது ஆயிரம் படுக்கைகள் கொண்ட வசதிகளுடன் உயர் சிறப்பு மருத்துவமனையாக அமைந்துள்ளது. தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 3 கட்டடங்களை கொண்ட 52,428 ச.மீ. பரப்பளவுடன் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிறுநீரகவியல், இருதயவில், நரம்பியல், மயக்கவியல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட துறைகள் செயல்படவுள்ளன.

249 ரெகுலர் மற்றும் 508 அவுட்சோர்சிங் எனப்படும் ஒப்பந்த அடிப்படை என மொத்தம் 757 பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். மருந்தாளுநர்கள், செவிலியர்கள், உளவியல் நிபுணர்கள் இந்த மருத்துவமனையில் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். 60 செவிலியர்கள், 30 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த மருத்துவமனையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவர் கலந்து கொள்வார் என முன்னதாக அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், குடியரசுத் தலைவரின் தமிழக வருகை திடீரென ரத்தானது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மருத்துவ பணியாளர்களும் இணைந்து மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மருத்துவமனையின் மையத்தில் வைக்கப்பட்ட கலைஞரின் திருவுருவச் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT