Skip to main content

“திமுக ‘பட்டி மாடல்’-ஐ கையில் எடுத்துள்ளது” - அண்ணாமலை குற்றச்சாட்டு

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

Annamalai accuses DMK of functioning in Erode East by-election

 

திமுக ‘பட்டி மாடல்’ என்ற ஒன்றை ஈரோடு கிழக்கு தேர்தலில் பயன்படுத்துவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

 

1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பில் பலியான பொதுமக்களுக்கு தமிழக பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.

 

நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “திமுக மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வந்தால் மக்களுக்கு 500 ரூபாயும் வேறு கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வரும் பொழுது அதற்கு போகாமல் இருந்தால் ரூ. 1000 ரூபாயும் கொடுக்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பட்டி பட்டியாக மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர். பட்டி என்பது அரவக்குறிச்சி மாடல், பணம் கொடுத்தல் என்பது திருமங்கலம் மாடல். இவை இரண்டையும் இணைத்து சிலர் இறங்கி இருக்கின்றனர். “பட்டி மாடல்” என்னும் பெயரில் காலையில் அழைத்து வந்து அடைத்து வைத்து விடுகின்றனர். பிரச்சாரத்திற்கு விடுவது இல்லை. இவை அனைத்தையும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒரு கடிதம் மூலம் எழுதி உள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளோம்.

 

அதேபோல், மாநிலத்தில் தேர்தல் ஆணையரிடம் பாஜக கொடுத்த புகாரில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கே.என்.நேரு, ஈவிகேஎஸ் இளங்கோவன் இருவரும் பேசியது குறித்து புகார் அளித்தோம். இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு எ.வ.வேலு மார்ஃப் செய்யப்பட்டது எனச் சொன்னார். அதற்கு நாங்கள் சவால் விட்டு இருந்தோம். தடயவியல் துறையினரிடம் அந்த ஆடியோவை கொடுக்கிறோம். அதை இல்லை என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகிவிடுவதாக சொல்லி இருந்தேன். இதுவரை பேச்சு மூச்சு இல்லை. 

 

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஜனநாயகத்தை காப்பாற்றுகிறேன் என முதல்வர் பேசுகிறார். ஈரோடு கிழக்கில் நடப்பது ஜனநாயகப் படுகொலை. அனைத்து அமைச்சர்களும் அங்கு செல்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு அக்கறை ஈரோடு கிழக்கில் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது. அதனால் தலைமை தேர்தல் அதிகாரி முறைப்படி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.