ADVERTISEMENT

கரோனா காலத்தில் ஊருக்கே சோறு போடும் தமிழக உழவர்களுக்கு மலேசியா, சிங்கப்பூரில் மரியாதை!

03:41 PM Jul 04, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செட்டித்திருக்கோணம் மற்றும் கோவிந்தபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கரோனா காலத்தில் அயராது பாடுபட்டு ஊருக்கே சோறு போடும் உழவனுக்கும் இயற்கை அன்னைக்கும் மரியாதை செலுத்தும் வகையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வேலை செய்து வாழும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களால் முன்னெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில் உலகத்துக்கே உணவளிக்கும் உழவனுக்கும் இயற்கை அன்னைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக அரிசி, பருப்பு, காய்கறிகளைப் படையலிட்டு நன்றி தெரிவித்தும் வணங்கியும் வாழ்த்துகள் தெரிவித்த நிகழ்வு உழவர்கள் மற்றும் உழவர்கள் நலன் விரும்பும் அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் கரோனா காலத்திலும் தன் இரத்தத்தை வியர்வையாக நிலத்தில் சிந்தி வயலில் உணவுப் பொருட்களை இயற்கையின் பெரும் ஒத்துழைப்போடு உற்பத்தி செய்து தரும் உழவனுக்கும், இயற்கை அன்னைக்கும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சிங்கப்பூர் மலேசியாவில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இந்தச் செயல்களை வலைத்தளங்கள் மூலம் அறிந்த அரியலூர் மாவட்ட உழவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நாம் இளைஞர்கள் பலர் தவறான வழிக்குப் போகிறார்கள் என்று கூறுகிறோம் இப்படியும் இளைஞர்கள் உள்ளதை எண்ணி உழவர் பெருமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT