ADVERTISEMENT

''இனி எவருக்கும் இத்தகைய எண்ணமே எழாதவாறு மிகக் கடுமையான தண்டனை வேண்டும்''- சீமான் வலியுறுத்தல்

08:53 AM Nov 14, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவையில் சின்மயா வித்யாலயா என்ற தனியார்ப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த சம்பவம் குறித்து கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது,

'கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். கோவை சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைதுசெய்யப்பட்டது சற்றே ஆறுதலைத் தந்தாலும், அக்கொடுங்கோலனைச் சட்டத்தின் பிடியிலிருந்தும், தண்டனையிலிருந்தும் தப்பிக்கவிடாது, இனி எவருக்கும் இத்தகைய எண்ணமே எழாதவாறு தடுக்கும் வகையில் மிகக் கடுமையான தண்டனையை உறுதிசெய்ய வேண்டும். மாணவியின் மீதே பழிசுமத்தி அப்பிஞ்சை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, இளந்தளிர் கருகுவதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல்வேறு மேடைகளில், பாலியல் துன்புறுத்தல் கொடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளைக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து அவர் பேசியது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT