கோவையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ராகுல்(22), பிரகாஷ்(22),நாராயணமூர்த்தி(32),கார்த்திகேயன்(22) ஆகியோருடன் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

The brutality to a girl who went with boy friends to celebrate birthdays in Coimbatore

Advertisment

Advertisment

இதனிடையே 26.11.2019 அன்று பிறந்தநாள் கொண்டாடுவதற்காக வெளியில் சென்றனர். அங்கு 4 பேரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய சிறுமி சோர்வாக இருப்பதைக் கண்ட பெற்றோர் விசாரித்தபோது, தன்னை 4 பேர் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியது குறித்து கூறினார்.

இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஆர்எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.