ADVERTISEMENT

செத்துப்போன நபரைப் பற்றி சொல்லக்கூடாது... இன்னொரு உண்மையை சொல்லுகிறேன்... நிலானி கண்ணீர்

06:16 PM Sep 18, 2018 | rajavel

ADVERTISEMENT

தன்னிடம் பழகிய உதவி இயக்குநர் காந்தியை நண்பராக மட்டுமே கருதினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும் தான் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு தளத்திற்கும் வந்து தொந்தரவு கொடுத்ததாக சின்னத்திரை நடிகை நிலானி கடந்த 15ஆம் தேதி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.


புகாரைப் பெற்ற போலீசார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் 16ஆம் தேதி கே.கே.நகரில் காந்தி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்ட காநதி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் நிலானி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தப்போது,

திருவண்ணாமலையில் தனலெட்சுமி என்ற பெண்ணை ஏமாற்றியிருக்கிறான். அந்த பெண் எனக்கு போன் பண்ணி காந்தி ஒன்றரை லட்சம ஏமாற்றிவிட்டார். கல்யாணம் பண்ணிக்கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என அழுதார். காந்தி கைப்பட எழுதிக்கொடுத்த அவன் ஏமாற்றிய பெண்களோட லிஸ்ட். இது அவனே உண்மையை ஒத்துக்கொள்கிறேன் என்கிற பெயரில் எழுதிக்கொடுத்தான். இதில் சென்னையில் நந்தினி, சாந்தி, அமுதா, தனலெட்சுமி... இந்த தனலெட்சுமி முக்கிய எவிடன்ஸ்ஸா இருப்பாங்க. ஏனென்றால் அவுங்கதான் இவனை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டார். என்னுடைய பெயர் கெட்டுப்போய்விடும் என்று நான் மீடியாவுக்கு வராமல் ஒதுங்கி போய்விட்டேன்.

இவன் நெருங்கிய நண்பர் ஜானி என்பவன்தான் பெண்களை இவனுக்கு பழக்கப்படுத்திவிட்டு எல்லாத்தையும் கூட இருந்து பார்த்தவன். நீங்க நம்பரை கலெக்ட் பண்ணி விசாரித்து பாருங்கள். எல்லா உண்மையும் தெரிய வரும்.

நான் என் மனநிம்மதிக்காக பொது விசயங்களில் தலையிட ஆரம்பித்தேன். ஸ்டெர்லைட் விசயத்திற்காக பேசினேன். கைது செய்யப்பட்டேன். அப்போது எனது அனுமதி இல்லாமல் என்னை பெயிலில் எடுப்பதற்காக உதவி செய்தான். பணம் என்னோடது. வக்கீலை பார்ப்பது உள்ளிட்ட வேலைகளை செய்தான். திரும்பவும் நட்புடன் இருந்தான்.

நான் இன்னொரு உண்மையை சொல்லுகிறேன். செத்துப்போன நபரைப் பற்றி சொல்லக்கூடாது. இருந்தாலும் சொல்லுகிறேன். காந்தி லலித்குமாருக்கு ஆண்மை இல்லை. பழைய கேஸ் ஒன்றில் போலீஸ் அவனுக்கு கரெண்ட் ஷாக்கொடுத்து ஆண்மை போயிருக்கிறது. அவனால ஒரு கல்யாணம் பண்ணிக்க முடியாது. அவன் கவுரவத்துக்காக என்னை மனைவி என்று சொல்லனும்முன்னு இவ்வளவு போராடினான். நான் இதனை எதிர்பார்க்காத ஒரு லேடி. அவன் இந்த சொசைட்டியில எனக்கு மனைவி இருக்கான்னு காட்டிக்கத்தான் என்னை ட்ரை பண்ணினான். அதானேயொழிய வேறு எந்த ஒரு எதிர்பார்ப்பும் என்னிடம் கிடையாது.

தற்கொலைக்கு நீங்கதான் காரணமா?

நான் எப்படிங்க காரணமாவேன். கெட்டவன் என்று விலகினால் நான் காரணமாவேனா..

இவ்வாறு கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT