ADVERTISEMENT

அண்ணாமலை நடைப்பயணம் தொடக்க விழா; மன்னிப்பு கேட்ட அமித்ஷா

07:50 PM Jul 28, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் இன்று இராமேஸ்வரத்திலிருந்து ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தைத் துவங்க இருக்கிறார். இந்த நடைப்பயணத்தை இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் தற்பொழுது நிகழ்ச்சியானது துவங்கியுள்ளது. தற்பொழுது அமித்ஷா வந்தடைந்த நிலையில், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வந்திருந்த நிலையில், அமித்ஷா வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர். பின்னர் விழா மேடைக்கு வந்து சேர்ந்த அமித்ஷாவை அண்ணாமலை மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். அதன் பின்னர் நடைப்பயணம் தொடர்பான காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, ''தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கூட்டணிக் கட்சி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழில் பேச முடியாததற்கும் மன்னியுங்கள். ராமேஸ்வரம் பூமி இந்தியாவின், இந்து மதத்தின் சின்னமாக விளங்குகிறது. என் மண்; என் மக்கள் நடைப்பயணம் இந்திய நாட்டில் 130 கோடி மக்களின் மனதில் ஒரு மரியாதையை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகின்ற ஒரு நடைப்பயணம். இது அரசியல் சார்ந்ததல்ல. தமிழக கலாச்சாரத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லும் நடைப்பயணம். தமிழ்நாட்டை ஊழலிலிருந்து விடுவிக்க நடத்தப்படும் நடைப்பயணம். ஊழல்வாதிகளை ஒழித்து ஏழை மக்களின் நலத்தைப் பேணும் அரசை உருவாக்கும் நடைப்பயணம். இந்த நடைப்பயணம் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை சீர்படுத்தும் நடவடிக்கை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் பிரதமரின் செய்தியைக் கொண்டு செல்லப்போகிறார் அண்ணாமலை'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT