ADVERTISEMENT

“அண்ணாமலை பல்கலை. வேளாண் படிப்புக்கு 14ஆம் தேதி கலந்தாய்வு” - துணைவேந்தர்

06:03 PM Feb 11, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவராகப் பயின்று பேராசிரியர், துறைத் தலைவர், வேளாண்புல முதல்வர் உள்ளிட்ட பதவிகளை வகித்து தற்போது அதே பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி பல்கலைக்கழகத்தின் வேளாண் புலத்தில் உள்ள வேளாண் கழகம் சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வேளாண் புலத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான பி.எஸ்.சி. விவசாயம் மற்றும் தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தகுதி பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வேளாண் புலத்தில் பி.எஸ்.சி. விவசாயம் மற்றும் தோட்டக்கலை ஆகிய பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 14-ஆம் தேதி இணைய வழி மூலமாக நடைபெறுகிறது.

மாணவர் சேர்க்கை தகுதி பட்டியலில் சேலம் மாணவி ஜனனி 197.460 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார். கடையம்பட்டி மாணவி ஹரிப்பிரியா 196.145 இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். கரூர் மாணவர் 195.945 எடுத்து மூன்றாம் இடம் பெற்றுள்ளார். இதில் 14ஆம் தேதி மாற்றுத்திறனாளி மற்றும் அரசு பள்ளியில் 7.5% இட ஒதுக்கீடு மூலம் வரும் மாணவர்களுக்கு நேரடியாக கலந்தாய்வு நடைபெறும். ஏணைய மாணவர்களுக்கு இணைய வழி மூலமாக கலந்தாய்வு நடைபெறும்” என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT