Skip to main content

அண்ணாமலை பல்கலையில் வேளாண்துறையில் மாணவர் சேர்க்கைக்கு சமவாய்ப்பு எண் வெளியீடு

Published on 04/07/2018 | Edited on 04/07/2018

 

uu


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்துறையில் 2018-19 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு சமவாய்ப்பு (ரேண்டம்) எண்ணை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் வெளியிட்டார். பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,   இளங்கலை வேளாண்மை அறிவியல் பாடத்தில் மொத்தம் 1000 சீட்டுக்கள் உள்ளது. இதில் அரசு ஒதுக்கீடு பிரிவில் 500-ம், சுயநிதி பிரிவில் 500-ம் என ஒதுக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை பிரிவில் 70 சீட்டுகள் உள்ளது. அரசு ஒதுக்கீட்டில் 8244 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் 8050 விண்ணப்பம் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. 

 

சுயநிதி ஒதுக்கீட்டில் 2202 விண்ணப்பங்கள் வந்துள்ளது. அதில்2173 விண்ணங்கள் தகுதியானவை. தோட்டக்கலைதுறையில் 887 விண்ணப்பத்திற்கு 870 தகுதியானவை. ஜூலை 15-ந்தேதிக்குள் கலந்தாய்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். கலந்தாய்வுக்கு வேளாண் அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை அழைக்க உள்ளோம். சரியான தேதியை அரசு தான் முடிவு செய்யும். மேலும் இந்த ஆண்டு சுயநிதி வேளாண்மை பிரிவில் 200 சீட்டுகள் அதிகபடுத்த அனுமதி கேட்டுள்ளோம். கிடைத்தால் வரும் கல்வி ஆண்டு முதல் கூடுதலாக 200 மாணவர்களை சேர்க்க வாய்ப்பு இருக்கும் என்றார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் திருவள்ளுவன் உள்ளிட்ட அனைத்து துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.