ADVERTISEMENT

’அண்ணாலைப் பல்கலைக்கழகம் கலைமகளின் மறு உருவாக உள்ளது’- பத்மஸ்ரீ சீர்காழி சிவசிதம்பரம்

05:12 PM Aug 29, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


அண்ணாமலைப் பல்கலைக்கழக நுண்கலைப்புலம் சார்பில் கலாச்சார பரிவர்த்தனையில் இசையும், நடனமும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் பல்கலைக்கழக வளாக லிப்ரா ஹாலில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியைபல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் தலைமையேற்று குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் இசையும், நடனமும் கலாச்சார பண்பாட்டோடு இணைந்தே வாழ்ந்து வருவது நுண்கலைகளுக்கு உயரியத்தனித்தன்மையை எடுத்துக்காட்டுவதாக கூறினார்.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பத்ம ஸ்ரீ சீர்காழி சிவசிதம்பரம் மாணவர்கள் மத்தியில் பேசுகையில் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப் பெறுவதால் இசையும்,நடனமும் துறைதோறும் வளர்ச்சி அடைவதோடு மாணவர்களும் தங்கள் ஆளுமைத் திறனை பெருக்கிக் கொள்வதற்கு வழிகாட்டியாக திகழ்கிறது என்றார். இந்த கருத்தரங்கு நடத்துவதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஏற்ற இடம்.

தமிழையும் இசையும் வளர்த்த பல்கலைக்கழகத்தில் நடப்பது பெருமைமிக்கது. கலைமகளின் மறு உருவாக உள்ளது என்றார். இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இசைத்துறையை சார்ந்த முனைவர் கிருபாசக்திகருணா,அண்ணாமலைப்பல்கலைக்கழக நுண்கலைப்புல முதல்வர் முத்துராமன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக இசைத்துறைத் தலைவர் குமார் வரவேற்புரை வழங்கினார். உதவிப் பேராசிரியர் பிரகாஷ்நன்றியுரை கூறினார்.

இவ்விழாவில் பிற மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டு ஆய்வாளர்களும் கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரைகளை சமர்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களானஉதவிப் பேராசிரியர்கள் பிரகாஷ் மற்றும் வேணுகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT