ADVERTISEMENT

மண்வெட்டியால் உணவு கிளறி பக்தர்களுக்கு அன்னதானம் : 122 ஆண்டு விநோத திருவிழா

12:23 AM May 05, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரகோசமங்கை கிராமத்தின் நீர்பாசன கண்மாயின் மேல் கரையில் கோவிந்தன் கோயில் அமைந்துள்ளது. கோவிந்தன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மதுரையில் அழகர் புறப்பாடாகி இருப்பு நிலை வந்தவுடன் கொண்டாடப்படும் அன்னதான விழாவில் பங்கேற்பதற்காக 10 கி.மீ., சுற்றளவில் உள்ள கிராமங்களில் உள்ள 10 ஆயிரம் பேர் விழாவில் பங்கேற்றனர்.

இரண்டாயிரம் கிலோ அரிசியில் சாதம் வடித்து, கோயிலுக்கு அருகே உள்ள அறையில் பெரிய அளவில் மலை போல் குவித்து வைக்கப்படுகிறது. தலுகை என்ற பெயரில் அன்னதானத்தில் சமைப்பதற்காக வீட்டிற்கு ஒரு பெண்கள் வீதம் காலை 10 மணிக்கே காய்கறிகள் நறுக்க ஆரம்பிப்பார்கள். ஆண்கள் சோறாக்கும் வேலையை செய்வார்கள்.

இச்சமையலில் வெள்ளை பூசணிக்காய் சாம்பார் மட்டும் பிரதானமாக இருக்கும். மூன்று வகை கூட்டுகள் இடம் பெறும். கோவிந்தசுவாமிக்கு மாலையில் அன்னபூஜை செய்யப்பட்டு, பூசாரி தொட்டுகொடுக்கும் மண்வெட்டியைக்கொண்டு சோற்றினை வாரிவளித்து பரிமாறப்படும். சேற்றில் மண் கிளறுவது போன்று சோற்றை கிளறி அண்டாவில் கொட்டப்படுகிறது. மாலை 6 மணி முதல் நள்ளிரவு 11:30 வரை பந்திகள் நடக்கும்.

கோயில் நிர்வாகிகள் கூறுகையில், கோவிந்தன் கோடாங்கி என்பவரால் ஐந்து தலைமுறைக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட விழாவில், முன்னதாக உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் தபசு திருநாள் அன்று மேளதாளங்கள் முழங்க கையின் இடுக்கில் வைத்து ‘திரி துவக்கம்‘ மூலம் 3 நாட்கள் சுற்றுப்பகுதிகளில் நெல், மிளகாய், புளி, பருப்பு, அரிசி இவைகளை யாசகமாக பெற்று அதனைக் கொண்டு இந்த அன்னதான விழாவை நடத்துவோம், இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். நாடு செழிக்க, நல்ல மழை பெய்ய, விவசாயம் செழிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகிறது. இவ்விழா முடிந்தவுடன் வருண பகவானின் கருணை நிச்சயம் இப்பகுதிக்கு உண்டு என்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தரகோசமங்கை யாதவ மக்கள் செய்திருந்தனர்.

- பாலாஜி

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT