ADVERTISEMENT

ஆண்டிபட்டியில் அதிமுக, அமமுகவினர்  மோதல்! கொடிகம்பம் உடைப்பு!

04:40 PM Dec 06, 2018 | sakthivel.m

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுகவினரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் மோதி கொண்டதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

ADVERTISEMENT


தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே உள்ள ராமலிங்க மடத்தில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டிடிவி அணியைச் சேர்ந்த கிளைச் செயலாளர் தலைமையில் கட்சியினர் நேற்று ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதற்காக அங்குள்ள அதிமுக கொடி கம்பத்தின் கீழ் ஜெ. உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் மின் விளக்கு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் தங்களது கொடிக்கம்பத்தில் ஜெ. படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவதற்கு அப்பகுதயில் உள்ள அதிமுக கிளைச் செயலாளர் முத்துமணி தலைமையில் அக்கட்சியினர் அங்கு திரண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அதிமுக , அமமுகவை சேர்ந்த கரைவேஷ்டிகளுக்கு இடையே வாய்த்தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த டிடிவி அணியினர் அங்குள்ள அதிமுக கொடிக்கம்பத்தின் உடைத்தனர். இதனால் ஒரு பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்று போலீசாருக்கு தெரியவே உடனே சம்பவ இடத்துக்கு வந்து இரு தரப்பையும் பேசி சமாதானப் படுத்தினார். அதோடு காயமடைந்த டிடிவி அணியை சேர்ந்த பீமராசையும் அவருடைய மகன் முத்துக்குமார் உள்பட சிலர் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் மூலம் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT