ADVERTISEMENT

அமித்ஷா தமிழக வருகை எங்களுக்கு பவுர்ணமி போன்றது: தமிழிசை

08:50 AM Jul 09, 2018 | Anonymous (not verified)


அமித்ஷா தமிழகத்துக்கு வருகை தருவது எங்களுக்கு பவுர்ணமி போன்றது, ஆனால் ஒரு சிலருக்கு அமாவாசையாக இருக்கும் என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்ளை சந்தித்த அவர்,

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை, தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தையும், எங்களுக்கு உற்சாக ஊக்கத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏனென்றால் பா.ஜ.க. குறித்து நிறைய விமர்சனங்கள் எழுகின்றன. எந்த கட்சியாக இருந்தாலும், அது அடிப்படையிலே வளர்ந்து வரவேண்டியது இயல்பு தான். தேசிய கட்சி ஒன்று தமிழகத்தில் காலூன்றுவது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது.தேசிய கட்சி தமிழகத்தில் காலூன்றுவது அவ்வளவு சுலபமல்ல. பல்லாயிரக்கணக்கானோர் அமித்ஷாவை வரவேற்க விமான நிலையம் வருகிறார்கள்.

அமித்ஷாவின் வருகையில் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் இடம்பெற போவதில்லை. முக்கிய பிரமுகர்கள் யாரையும் சந்திக்கவும் திட்டம் இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பும் கிடையாது. இது அமைப்பு ரீதியான ஒரு கூட்டம். இது முழுக்க முழுக்க பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க.வை தயார்படுத்தும் நிகழ்வுக்காக நடைபெறும் முக்கிய கூட்டம். இதில் அதற்கான வியூகங்கள் வகுப்பது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட உள்ளது.

அமித்ஷாவின் வருகை எங்களுக்கு பவுர்ணமியாகவும், ஒரு சிலருக்கு அமாவாசையாகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT