ADVERTISEMENT

மேலும் ஒரு வழக்கில் சிக்கிய அமர் பிரசாத் ரெட்டி

04:46 PM Oct 26, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பா.ஜ.க. பிரமுகரான அமர் பிரசாத் ரெட்டி போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் சென்னை பனையூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு 100 அடி உயரம் கொண்ட பா.ஜ.க. கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட இருந்தது. அனுமதியின்றி அக்கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் அந்த கொடிக் கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக ஜே.சி.பி. வாகனம் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினர் ஜே.சி.பி. வாகனத்தை சேதப்படுத்த முயன்றனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே பா.ஜ.க.வினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தாக்கியதாகவும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் அண்ணாமலையின் நண்பர் அமர் பிரசாத் ரெட்டி கடந்த 22 ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். இந்நிலையில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது போலீசார் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின் போது தமிழக முதல்வர் புகைப்படத்தை அகற்றிவிட்டு பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டியதாகப் புகார் எழுந்திருந்தது. அந்தப் புகாரின் பேரில் தற்போது கோட்டூர்புரம் போலீசார் அமர் பிரசாத் ரெட்டி மீது மேலும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT