ADVERTISEMENT

''நான் மட்டும்தான் லஞ்சம் வாங்குறேனா... 3 அடுக்கு வீடு கட்டியிருக்கார் தலையாரி போய்ப் பாருங்க...'' - விஏஓவின் வைரல் வீடியோ 

04:41 PM Nov 26, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரையில் 'கணவனால் கைவிடப்பட்டோர்' என்று சான்றிதழ் வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும் காட்சிகளும். லஞ்சம் குறித்து கேள்வி எழுப்பியதற்கும் 'நான் மட்டுமா லஞ்சம் வாங்குகிறேன்' என பேசும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் யாகப்பா நகரைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் கணவனால் கைவிடப்பட்டவர் எனச் சான்றிதழ் வாங்க முயன்றுள்ளார். ஆனால் மேலமடை கிராம நிர்வாக அலுவலர் ரமணி, சான்றுக்கு கையொப்பம் இடாமல் அலைக்கழித்து வந்துள்ளார். இதனால் தன்னார்வலர் ஒருவர் மூலமாக பஞ்சவர்ணம் விஏஓ ரமணியை அணுகியுள்ளார். அப்பொழுது ரமணி 250 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பணத்தை வாங்கும் பொழுது அங்கிருந்த தன்னார்வலர் லஞ்சம் வாங்கும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துகொண்டார்.

பின்னர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக இருவரும் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில்,

விஏஓ ரமணி: எதற்கு வீடியோ எடுத்த, எப்ப வீடியோ எடுத்த...


தன்னார்வலர்: நீங்க அவங்கள ஒரு வாரமா அலைய விட்டீங்களாமே. உங்க தலையாரி இருக்காருல்ல பகவதி அவர்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கவா? நீங்க ஏகப்பட்ட லஞ்சம் வாங்குறீங்கன்னு...

விஏஓ ரமணி: பகவதி வாங்க மாட்டேங்கிறாரு நான்தான் வாங்குறேனா. பகவதிக்கு மேலேயா நான் சம்பாதிக்க போறேன். தலையாரி வீட்டை போயி பாருங்க மூணு மாடி கட்டிடம் கட்டி வச்சிருக்கார்.

தன்னார்வலர்: நான் கலெக்டர் கிட்ட பெட்டிஷன் கொடுத்து நடவடிக்கை எடுக்க சொல்றேன்.

விஏஓ ரமணி: விடுப்பா இதெல்லாம் சின்ன விஷயம். இதெல்லாம் பெருசாக்கிக்கிட்டு... என அந்த உரையாடல் உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT