ADVERTISEMENT

“பேரறிவாளன் விடுதலை; ஒன்றிய அரசுக்கு மிகப்பெரிய சாட்டையடி” - எம்.எல்.ஏ  ஆளூர் ஷாநவாஸ் 

10:44 AM May 19, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

கோப்புப் படம்

ADVERTISEMENT

“பேரறிவாளன் விடுதலையில் ஒன்றிய அரசுக்கு ஒரு மிகப்பெரிய சாட்டையடி கிடைத்திருக்கிறது” என்கிறார் விசிக மாநில துணைப் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஆளூர் ஷாநவாஸ்.

முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஆளூர் ஷாநவாஸ், “30 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு குறிப்பாக அற்புதம் அம்மாள் என்கிற ஒற்றை தாயின் போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற ஒரு மகத்தான வெற்றியாக இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

இன்னும் இதுபோன்று விடுதலை செய்யப்பட வேண்டியவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை இந்த தீர்ப்பின் மூலம் நமக்கு கிடைத்திருக்கிறது. இது பேரறிவாளன் வழக்கு பேரறிவாளன் என்கிற ஒற்றை மனிதரின் விடுதலை என்று சுருக்கி பார்த்து விட முடியாத அளவிற்கு இதில் மாநில அரசினுடைய அதிகாரம் இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக அரசியல் அமைப்பு சட்டம் 161வது பிரிவின் கீழ் மாநில அரசுக்கு முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. அந்த பிரிவின் கீழ் மாநில அரசு ஒரு தீர்மானத்தை ஏற்றினாலோ, ஒரு சட்டமன்றம் கூடி முடிவு எடுத்தாலும் அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதுதான் அதில் இருக்கிற ஒன்று. ஆனால், அதை அவமரியாதை செய்யக்கூடிய வகையில் சட்டமன்றத்தையே அவமரியாதை செய்யக்கூடிய வகையில் தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் தன்னுடைய கருத்தின் அடிப்படையில் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதற்கு இன்றைக்கு உச்சநீதிமன்றம் பதிலடி கொடுத்திருக்கிறது.

மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை; ஒன்றிய அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. குடியரசுத் தலைவர்தான் முடிவெடுப்பார் என்றெல்லாம் இதில் பந்தாடி கொண்டிருந்த, விளையாடிக்கொண்டிருந்த ஒன்றிய அரசுக்கு ஒரு மிகப்பெரிய சாட்டையடி கிடைத்திருக்கிறது.

மாநில அரசின் அதிகாரமும் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது‌. ஒன்றிய அரசுக்கும் ஆளுநருக்கும் சரியான பதிலடி கிடைத்திருக்கிறது. பேரறிவாளனும் 30 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே இது ஒரு முப்பரிமான மகிழ்ச்சியை நமக்கு தருகிறது. இதில் மிக முக்கியமாக நாம் சொல்ல வேண்டியது இவ்வளவு நாளும் நாம் சொல்லிக் கொண்டிருந்த அதே கருத்துதான், ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; மாநில அரசினுடைய முடிவை ஏற்று செயல்பட வேண்டிய இடத்தில் இருப்பவர் ஆளுநர்.


முதலமைச்சரின் மொழியில் சொல்வதென்றால் ‘ஒரு போஸ்ட்மேன்.’ அது இந்த இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அவர் போஸ்ட் மேன் தான். நம்முடைய சட்டமன்றம் தான் உயர்வானது, மதிப்பானது, அதிகாரம் மிக்கது என்பது மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT