ADVERTISEMENT

"இலங்கை தமிழர்களுக்கு உதவி அனுமதித்திடுக"- பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

09:49 PM Mar 31, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு நேரடியாக உதவ, மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது, தமிழக முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொருளாதார நெருக்கடியால் தவிக்கும், இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் கொழும்பில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவ, தமிழக அரசு விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். உயிர் காக்கும் மருந்துகள், உணவுப் பொருட்களை தமிழ்நாடு அவர்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியறுத்தியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல், ஆபத்தான கடல்வழி பயணம் செய்து, பச்சிளங் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் 16 பேர் தமிழகம் வந்திருக்கும் நிலையில், முதலமைச்சர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இச்சந்திப்பின் போது, 1983 முதல் 2012 ஆம் ஆண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் இருந்து 3,04,269 ஈழத்தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், ஈழத்தமிழர்களுக்கு அரசியல் உள்ளிட்ட அனைத்திலும் சம உரிமை வழங்க இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT