ADVERTISEMENT

ரஜினியுடன் கூட்டணி? மு.க.அழகிரி ஆலோசனை!

10:49 AM Nov 16, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

கோப்புப் படம்

ADVERTISEMENT

தி.மு.க.வில் மீண்டும் இணைந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையில் இரண்டு வருடங்களாக காத்திருந்தார் மு.க.அழகிரி. அவரை இணைத்துக்கொள்ள கலைஞர் குடும்பமும் முயற்சித்தது. ஆனால், ஸ்டாலினும் அவரது குடும்பமும் இதனை ஏற்கவில்லை.

இதனால், அரசியலில் இருந்து துறவறம் செய்கிற அளவுக்கு அமைதியாக இருந்தார் அழகிரி. தனிக்கட்சி ஆரம்பித்து தனது அரசியலை அழகிரி காட்டும்போது, அவருடன் இணைந்து செயலாற்ற தி.மு.க.வின் அதிருப்தியாளர்கள் நினைத்திருந்தனர். ஆனால், அழகிரியின் நீண்ட மௌனம் அவர்களை தி.மு.க.விலேயே இருக்க வைத்தது.

இந்த நிலையில், தீபாவளிக்காக ரஜினியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் அழகிரி. இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட நிலையில் சில நிமிடங்கள் அரசியலையும் பேசியிருக்கிறார்கள். அப்படி பேசிக்கொண்டதில் அழகிரியிடம் உற்சாகம் கரைபுரண்டோடியிருக்கிறது.

இந்த சூழலில், தீபாவளி வாழ்த்துகளுக்காக தன்னை தொடர்புகொண்ட தனது ஆதரவாளர்களிடம், தேர்தல் அரசியல் குறித்து மனம் விட்டு பேசியுள்ளார். அழகிரியின் பேச்சில் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், ‘தனது மௌனத்தை கலைக்க அண்ணன் அழகிரி முடிவு செய்துவிட்டார். தி.மு.க.விடம் இணைவது குறித்து கடைசியாக ஒரே ஒருமுறை மட்டும் பேசிப் பார்ப்பது என்றும், அதில் சாதகமான பதில் இல்லை எனில் தனிக்கட்சி துவக்குவது என்றும் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி ஆதரவாளர்களிடம் கலந்தாலோசிக்கவிருக்கிறார். அதன்பிறகு அழகிரியின் ஆட்டம் ஆரம்பமாகும். ரஜினி அரசியலுக்கு வரும் நிலையில் அவருடன் கூட்டணி அமைப்பார்’ என்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT