அவர் என்னை கட்சியில் இணைப்பது போல் தெரியவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி காட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரியிடம், என் ஆதங்கத்தை கலைஞரிடம் சொல்வதற்காகவே கலைஞர் நினைவிடம் வந்ததாகக் கூறியது குறித்து அந்த ஆதங்கம் என்ன என கேட்டபோது,

நேரம் வரும்போது எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன். அதனை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என அப்பா என்னிடம் சொல்லவில்லை. அவர் கூறும்போது நான் கூறுவேன் என்றார்.

உங்களை கட்சியில் இணைப்பதற்கான, இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதா?

இல்லை.. அவர் என்னை கட்சியில் இணைப்பது போல் தெரியவில்லை..

இணைக்காத பட்சத்தில் உங்களின் அடுத்தக்கட்ட முடிவு என்ன?

சென்னையில் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ள அமைதிப் பேரணியில் 1 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்த பேரணிக்கு பின்னர், பல முக்கியஸ்தர்கள் உள்ளனர், அனைத்து மாவட்டத்தில் இருந்தும் அவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றார்.