ADVERTISEMENT

மத்திய பட்ஜெட்டை கண்டித்து போராட்டம்; சட்ட நகல் எரிப்பு! - போலீசாருடன் போராட்டக்காரர்கள் தள்ளுமுள்ளு!

04:28 PM Feb 04, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


பிப். 1ஆம் தேதி, மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருச்சி தலைமை தபால் நிலையத்தின் முன்பு, தொ.மு.ச, ஐ.என்.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

ஆர்ப்பாட்டத்தில் அவர்கள், கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், தொழிலாளர்களுக்கு விரோதமான பல்வேறு அம்சங்கள் அதில் இருப்பதாகவும் கூறி பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் அவர்கள், மத்திய அரசு மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐ திரும்பப் பெற வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி உயர்வைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தொழிலாளர் சட்டத் தொகுப்பு நகலை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர். அதை காவல் துறையினர் தடுக்க முற்பட்டபோது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT