ADVERTISEMENT

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்!

12:26 PM Sep 21, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

தமிழக எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியான அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறி வருகின்றன. கரோனா காலத்தில் போதுமான முன்னெச்சரிக்கை எடுக்கவில்லை என்று திமுக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது. மேலும் இந்தி திணிப்பு, நீட் விவகாரம், புதிய கல்வி கொள்கை, வேளாண் மசோதா போன்ற விவகாரங்களில் மத்திய அரசு மீதும் திமுக அதிருப்தி தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் நடப்பு அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேசவும் இன்று திமுக தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய அம்சமாக வேளாண் மசோதா தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர். இறுதியில் வரும் 28ம் தேதி வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT