ADVERTISEMENT

24ம் தேதி அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம்- இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு!

12:38 PM Nov 07, 2019 | santhoshb@nakk…

அதிமுக கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நவம்பர் 24- ஆம் தேதி நடைபெறும் என இபிஎஸ்- ஓபிஎஸ் அறிவிப்பு. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுக கூட்டம் நடக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 24- ஆம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க உத்தரவு. இதற்கு முன் கடந்த 2017- ஆம் ஆண்டு செப்டம்பரில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT