ADVERTISEMENT

அதிமுக, பாஜகவால் தமிழகத்துக்கு துரோகம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!

11:07 AM Mar 30, 2018 | Anonymous (not verified)


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்கு அதிமுகவும், பாஜகவும் துரோகம் செய்துவிட்டன என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் க.அன்பழகன், கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்கு அதிமுகவும், பாஜகவும் துரோகம் செய்துவிட்டன என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT