ADVERTISEMENT

'நாளுக்குநாள் பலம் இழந்து வருகிறது அதிமுக கூட்டணி'- வேல்முருகன் பேட்டி

12:02 PM Mar 11, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், ஆதி தமிழர் பேரவைக்கு 1 தொகுதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 தொகுதி, மக்கள் விடுதலை கட்சிக்கு 1 தொகுதி, அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி என ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் வேல்முருகனின் த.வா.கவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்கட்சிக்குப் பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டதற்கான ஒப்பந்தத்தில் அக்கட்சி தலைவர் வேல்முருகன் கையெழுத்திட்டார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''நான் இரண்டுமுறை பண்ருட்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக நின்று வெற்றிபெற்றேன். அதேபோல் இந்தமுறையும் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருக்கிறேன். இந்த முறையும் நான் வெற்றிபெற்று தொகுதி மக்களுக்காக குரல் கொடுப்பேன். அதிமுக கூட்டணி நாளுக்கு நாள் பலம் இழந்து வருகிறது'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT