DMK Leader MK Stalin election campaign in dindigul district

தமிழகத்தில் அடுத்த மாதம் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல்லில் பாண்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். திமுக சார்பில் வேடசந்தூர் தொகுதியில் முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், நத்தம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான ஆண்டி அம்பலம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு வாக்கு சேகரிக்கவும் தேர்தல் பிரச்சாரம் செய்யவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நேற்று (16.03.2021) நாமக்கலில் இருந்து திண்டுக்கல் வந்தார்.

Advertisment

அப்பொழுது திடீரென திண்டுக்கல் நகர் பகுதியில் மெயின் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.எஸ்.ரோடு ஆகிய வீதிகளில் வேட்பாளருடன் நடந்துசென்று ஸ்டாலின், பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்பொழுது அங்கிருந்த பொது மக்கள் அவருடன் செல்ஃபி எடுத்துகொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளருடன் திடீரென நடந்து வந்து, பொதுமக்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்ததைப் பார்த்து அங்கிருந்த மக்கள் குஷியாகினர். ஸ்டாலினுடன் திமுக ஆத்தூர் தொகுதி வேட்பாளர் ஐ. பெரியசாமி, பழனி வேட்பாளர் செந்தில் குமார், ஒட்டன்சத்திரம் வேட்பாளர் சக்கரபாணி, முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி மற்றும் கட்சி பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

Advertisment