ADVERTISEMENT

‘அக்னிபாத்’ இரயில் மறியலுக்கு முயற்சித்த இளைஞர்கள்! 

03:57 PM Jun 18, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மாவட்டச் செயலாளர் லெனின் மற்றும் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் கூறியதாவது, “இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களைச் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும். இதைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் திட்டமாகவும் செயல்பட்டு வருகின்றது. இதுபோன்ற நிலை உருவானால், ராணுவத்தின் புனிதம் கெட்டுவிடும். ஆகவே அக்னிபாத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது கண்டோன்மெண்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தி ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். பின்னர் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் திருச்சி ரயில் நிலையம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT