ADVERTISEMENT

“அடுத்த தேர்தலுக்கு அப்புறம் திமுக மட்டும்தான் இருக்கும்...” - துரைமுருகன் பேச்சு

04:47 PM Nov 07, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசுகையில், ''49 வருடங்கள் இந்தக் கட்சியைக் கட்டிக் காத்தவர் கலைஞர். உலகத்திலேயே ஒரு கட்சிக்கு சுமார் 50 ஆண்டுக் காலம் தலைவனாக இருந்த ஒரே ஒரு மனிதர் கலைஞர் மட்டும்தான். உலகத்தில் எந்த நாட்டிலும் இப்படி கிடையாது கலைஞர் மட்டும்தான் இருந்தார். தொடர்ந்து 50 ஆண்டுக் காலம் கலைஞருடன் 24 மணி நேரம் கூடவே இருந்தவன் நான். அப்படிப்பட்ட தலைவர் இருந்ததால்தான் திமுக மிசாவில் இருந்து காப்பாற்றப்பட்டது. 13 வருடம் இந்தக் கட்சி ஆட்சியில் இல்லை. இருந்தாலும் அதனையடுத்து மீண்டும் கட்சியை ஆட்சிக்கு வர வைத்துக் காண்பித்தார். எல்லா திறமையும் அவரிடம் இருந்தது எனவே இந்தக் கட்சி தப்பித்துக் கொண்டது.

இன்னொரு முறை திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து வேறொரு கட்சி உருவாக முடியாது. இன்னும் பாருங்க அடுத்த தேர்தலுக்கு அப்புறம் இந்த ஒரு கட்சிதான் இருக்கும். மற்றவர்கள் எல்லாம் பேருக்குத் தான் இருப்பாங்க ஊருக்கு இருக்க மாட்டானுங்க. கட்சியினுடைய கொள்கைகள் அழியாமல் இருக்கணும். ஆகையால் இளைய சமுதாயத்திற்கு வழிவிட்டு முதியவர்கள் அனுசரிக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி, அது பிஜேபி வந்தாலும் சரி வேற யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் முதல் வேலை இந்தியைத் திணிப்பதுதான். அவங்க சொன்னாக்கூட கேப்பாங்க பிஜேபி காரங்க கேட்க மாட்டாங்க'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT